உள்ளடக்க விவரம் | |
---|---|
வகுப்பு | பத்தாம் வகுப்பு |
பாடம் | தமிழ் |
இயல் | 1 - அமுத ஊற்று |
பகுதி | 1.3 - இரட்டுற மொழிதல் |
கற்பவை கற்றபின்
1
அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது சிவாஜி, “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.
ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.”
இ) தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்.
இவைபோன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச் சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.
- ஆசிரியர் : இன்று வகுப்பிற்கு புதிதாக வந்த மாணவன் எங்கே ?
- மாணவன் : இதோ, உள்ளேன் ஐயா. (மாணவன் வகுப்பின் கடைசி இருக்கையிலிருந்து கூறுகிறான்)
- ஆசிரியர் : உன் பெயர் என்ன ?
- மாணவன் : கவியரசன்.
- ஆசிரியர் : அப்படியானால் உனக்கு இருக்க வேண்டிய நீண்ட வாலையும் கூர்மையான நகங்களையும் காணவில்லையே.
மாணவர்கள் அனைவரும் காரணம் புரியாமல் சிரிக்கின்றனர். அதற்கு ஆசிரியர் கூறிய விளக்கம் பின்வருமாறு அமைந்தது
' கவி ' என்றால் குரங்கு என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆகவேதான் நீ குரங்குகளின் அரசனானால் உன் வாலையும், கூரிய நகங்களையும் எங்கே என்றேன் என விளக்கினார்.
2
மொழியின் சிறப்புகளைப் பாடும் கவிதைகளுள் உங்களுக்குப் பிடித்தவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!!
வாழிய வாழியவே!
வானம் அளந்த
வன்மொழி வாழியவே! - வாழ்க
ஏழ்கடல் வைப்பினும்
தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே! - வாழ்க
என்றென்றும் வாழியவே
வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்த
அனைத்தும் அறிந்திடும்
வளர்மொழி வாழியவே!
வாழியவே!
வாழியவே!
வாழியவே!
- பாரதியார்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1
' மெத்த வணிகலன் ' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
குறுவினா
1
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான். - இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.
- சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
- சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.
சிறுவினா
1
தமிழழகனார் தமிழையும், கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கு | ||
---|---|---|
பாடல் அடிகள் | தமிழ் | கடல் |
முத்தமிழ் துய்ப்பதால் | இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது. | முத்தினை அமிழ்ந்து தருகிறது. |
முச்சங்கம் கண்டதால் | முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது. | வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது. |
மெத்த வணிகலமும் மேவதால் (மெத்த அணிகலன்) | ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது. | மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது. |
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க | சங்கப்பலகையில் அமர்ந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தனர். | தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காத்தது. |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1
' தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான ' - இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார் ?
அ) தேவநேயப் பாவாணர்ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்இ) தமிழழகனார்ஈ) எழில் முதல்வன்
இ) தமிழழகனார்
2
கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை ?
அ) இரண்டுஆ) மூன்றுஇ) நான்குஈ) ஐந்து
ஆ) மூன்று
3
கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது ?
அ) மணல்ஆ) சங்குஇ) கப்பல்ஈ) மீனவர்கள்
ஆ) சங்கு
4
முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை ?
அ) மூங்கில்ஆ) கடல்இ) மழைஈ) தேவர்கள்
ஆ) கடல்
5
தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை ?
அ) சங்க இலக்கியங்கள்ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்இ) ஐஞ்சிறு காப்பியங்கள்ஈ) நீதி இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
6
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது ?
அ) வேற்றுமை அணிஆ) பிறிதுமொழிதல் அணிஇ) சொற்பொருள் பின்வருநிலையணிஈ) சிலேடை அணி
ஈ) சிலேடை அணி
7
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது ?
அ) இரட்டுறமொழிதல் அணிஆ) வேற்றுமை அணிஇ) உவமை அணிஈ) உருவக அணி
அ) இரட்டுறமொழிதல் அணி
8
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன ?
அ) சண்முகமணிஆ) சண்முகசுந்தரம்இ) ஞானசுந்தரம்ஈ) ஆறுமுகம்
ஆ) சண்முகசுந்தரம்
9
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார் ?
அ) பத்துஆ) பன்னிரண்டுஇ) பதினான்குஈ) பதினாறு
ஆ) பன்னிரண்டு
10
முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது ?
அ) எட்டுத்தொகைஆ) பத்துப்பாட்டுஇ) சிற்றிலக்கியங்கள்ஈ) தனிப்பாடல் திரட்டு
ஈ) தனிப்பாடல் திரட்டு
குறுவினா
1
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை ?
- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- சீவகசிந்தாமணி,
- வளையாபதி,
- குண்டலகேசி.
2
கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை ?
- முத்தும், அமிழ்தமும் கிடைக்கிறது.
- வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகள் கிடைக்கிறன.
3
தமிழ்மொழி குறித்து தமிழழகனார் கூறிய செய்தி யாது ?
- தமிழ் இயல், இசை, நாடகம் முத்தமிழாய் வளர்ந்தது.
- முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
- ஐம்பெருங் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
- சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
4
இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன ? அதன் வேறுபெயர் யாது ?
- ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
- இதன் வேறுபெயர் சிலேடை அணி ஆகும்
5
சிலேடைகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- செம்மொழிச் சிலேடை
- பிறமொழிச் சிலேடை