1 : பொருள் வேற்றுமை அணி
பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : | |
---|---|
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். | |
சான்று : | |
" ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னே ரிலாத தமிழ். " ( தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் ) | |
சான்று விளக்கம் : | |
கதிரவன் | தமிழ் |
உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றுகிறது. | பொதிகை மலையிலிருந்து தோன்றுகிறது. |
கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளைப் போக்குகிறது. | உலகில் வாழும் மக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்குகிறது. |
ஒளிர்கின்ற கதிரவனாக இருக்கிறது. | தனக்கு நிகரில்லாத தமிழாக இருக்கிறது. |
அணி பொருத்தம் : | |
கதிரவனுக்கும், தமிழுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை கூறி, பின் அவற்றுள் தமிழ் தன்னிகரில்லாதது என வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று. |
2 : நிரல்நிறை அணி
நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : |
---|
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும், அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும். |
சான்று : |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை ( திருக்குறள் ) |
சான்று விளக்கம் : |
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். |
அணி பொருத்தம் : |
இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. எனவே, இக்குறட்பாவில் நிரல்நிறை அணி பயின்று வந்துள்ளது. |
3 : ஏகதேச உருவக அணி
ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : |
---|
செய்யுளில் கவிஞர் தாம் கூறும் இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். |
சான்று : |
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ( திருக்குறள் ) |
சான்று விளக்கம் : |
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும். |
அணி பொருத்தம் : |
சினத்தை நெருப்பாகவும், இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டார். எனவே, இது ஏகதேச உருவக அணி ஆயிற்று. |
4 : தொழில் உவமை அணி
தொழில் உவமை அணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : |
---|
செய்யுளில், ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும். |
சான்று : |
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க ( திருக்குறள் ) |
சான்று விளக்கம் : |
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும், நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல நின்று பழகுதல் வேண்டும். |
அணி பொருத்தம் : |
இக்குறட்பாவில், தீக்காய்தல் என்னும் செயல் (தொழில்), அரசரோடு பழகுவதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொழில் உவமை அணி ஆயிற்று. |
5 : உவமை அணி
உவமை அணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : | |
---|---|
உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும். | |
சான்று : | |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் ( திருக்குறள் ) | |
சான்று விளக்கம் : | |
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன் வாழ்தல் போன்றது. | |
அணி பொருத்தம் : | |
உவமை | குடங்கருள் பாம்போடு உடனுறைதல் |
உவமேயம் | உடம்பாடு இலாதவர் வாழ்க்கை |
உவம உருபு | அற்று |
இக்குறட்ட்பாவில், உவமை ஒரு தொடராகவும் மற்றும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு அற்று வெளிப்படையாக வந்துள்ளது. எனவே, இது உவமை அணி ஆயிற்று. |
6 : எடுத்துக்காட்டு உவமை அணி
எடுத்துக்காட்டு உவமை அணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : | |
---|---|
செய்யுளில், உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும். | |
சான்று : | |
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் ( திருக்குறள் ) | |
சான்று விளக்கம் : | |
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், (அதுபோல) கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர். | |
அணி பொருத்தம் : | |
உவமை | துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் |
உவமேயம் | கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர் |
உவம உருபு | (அதுபோல) மறைந்து வந்துள்ளது |
இக்குறட்ட்பாவில், உவமை ஒரு தொடராகவும் மற்றும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு அதுபோல மறைந்து வந்துள்ளது. எனவே, இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆயிற்று. |
7 : சொற்பொருள் பின்வருநிலையணி
சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக
அணி விளக்கம் : |
---|
செய்யுளில், முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளை தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும். |
சான்று 1 : |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ( திருக்குறள் ) |
சான்று 1 விளக்கம் : |
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு. |
அணி பொருத்தம் : |
இக்குறட்ட்பாவில், " பொருள் " என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து " கருத்து " என்ற ஒரே பொருளை தருகிறது. எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று. |
சான்று 2 : |
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் ( திருக்குறள் ) |
சான்று 2 விளக்கம் : |
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். |
அணி பொருத்தம் : |
இக்குறட்ட்பாவில், " எண்ணிய " என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து " நினைத்த " என்ற ஒரே பொருளை தருகிறது. எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று. |