10th Tamil Unit 1 Section 1.5 Text Book & Additional Solutions

உள்ளடக்க விவரம்
வகுப்புபத்தாம் வகுப்பு
பாடம்தமிழ்
இயல்1 - அமுத ஊற்று
பகுதி1.5 - எழுத்து, சொல்
kb-toc

கற்பவை கற்றபின்

1

தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.

  • தேன் - தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
  • நூல் - நூல் பல கல்.
  • பை - பை நிறைய பணம் இருந்தது.
  • மலர் - மலர் பறித்து வந்தேன்.
  • வா - விரைந்து வா.

2

வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

எ.கா: காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை

  • சிரி - சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை
  • படி - படிப்பு, படித்தல், படிக்காமை
  • தடு - தடுப்பு, தடுத்தல், தடுக்காமை

3

தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன்எங்கே செல்கிறாய் ? (தொடர்மொழி)
தம்பி___________________ (தனிமொழி)
அண்ணன்__________________ வாங்குகிறாய்? (தொடர்மொழி)
தம்பி___________________ (தொடர்மொழி)
அண்ணன்__________________ (தனிமொழி)
தம்பி___________________ (தொடர்மொழி)
அண்ணன்___________________
தம்பி___________________
அண்ணன்எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)
தம்பிகடைக்கு (தனிமொழி)
அண்ணன்இப்பொழுது என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி)
தம்பிபருப்பு வாங்குகிறேன். (தொடர்மொழி)
அண்ணன்எதற்கு? (தனிமொழி)
தம்பிபருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் (தொடர்மொழி)
அண்ணன்இன்று பருப்பு சோறு வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர்மொழி)
தம்பிசரி இன்று அம்மாவைப் பிரியாணி செய்து தரச்சொல்வோம். (தொடர்மொழி)

4

மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.

இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

  • அழைக்கும் - அழைத்தல்
  • ஏறுவேன் - ஏறுதல்
  • அமர்வேன் - அமர்தல்
  • பார்ப்பேன் - பார்த்தல்
  • எய்தும் - எய்தல்

5

கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

  • கட்டு : முதனிலைத் தொழிற்பெயர்
  • சொட்டு : முதனிலைத் தொழிற்பெயர்
  • வழிபாடு : விகுதி பெற்ற தொழிற்பெயர்
  • கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  • கோறல் : விகுதி பெற்ற தொழிற்பெயர்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1

" கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது " - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

அ) பாடிய, கேட்டவர்ஆ) பாடல், பாடியஇ) கேட்டவர், பாடியஈ) பாடல், கேட்டவர்

ஈ) பாடல், கேட்டவர்

குறுவினா

1

" வேங்கை " என்பதைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் (தனிமொழி)

வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடர்மொழி)

2

" உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் " – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

  • உடுப்பதூஉம் உண்பதூஉம் : இன்னிசை அளபெடை வந்துள்ளது.
  • செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.

சிறுவினா

1

" அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது "
இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

தொழிற்பெயர்எதிர்மறை தொழிற்பெயர்
அறிதல்அறியாமை
புரிதல்புரியாமை
தெரிதல்தெரியாமை
பிறத்தல்பிறவாமை

கூடுதல் வினாக்கள்

விரைவில் பதிவிடப்படும்

Previous Post Next Post